மலேசியாவில் இடம்பெறும் 7ஆவது UiTM International Sports Fiesta சுற்றுப்போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.
இது மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூனே, இலங்கை மற்றும் இந்துனேஷியா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழக வீரர்கள் பங்குபற்றும் வருடாந்த சர்வதேச போட்டி நிகழ்ச்சியாகும் . இது தொடர்ச்சியாக 7ஆவது தடவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு பட்மின்டன், புட்சால் கால்பந்தாட்டம், ரக்பி, டேபல் டென்னிஸ் ஆகிய போட்டிகள் இடம்பெறுகின்றன.
இப்போட்டிகளுக்கு இலங்கை பல்கலைக்கழங்களின் குறித்த போட்டிகளில் சிறந்தமுறையில் திறமைகளை வெளிப்படுத்திய அணிகள் தெரிவூசெய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. அந்தவகையில், இம்முறை புட்சால் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு வயம்ப பல்கலைக்கழக அணியினர் தெரிவூசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அவ்வணியில் பறகஹதெனிய பாடசாலை வீதியை சேர்ந்த மொஹமட் சஹீல் மொஹமட் அர்ஷாட் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் வயம்ப பல்கலைக்கழக்த்தில் முகாமைத்துவ பீடத்தின் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவராவார். பறகஹதெனிய தேசியப் பாடசாலையின் பழைய மாணவராவதுடன் பாடசாலைக் காலம் முதல் கால்பந்தாட்டத்தில் திறமையானவர் என்பதுடன் 13இன் கீழ் தொடக்கம் 19இன் கீழ் அணிகள் வரை பாடசாலை கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றிருந்ததுடன் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சிறந்த பின்னிலை (Right Back) வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பறகஹதெனிய தேசியப்பாடசாலை சார்பாகவூம் இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாகவூம் ஒரு மாணவன் மற்றும் அணி வீரர் ஒருவர் போட்டியொன்றுக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதற் தடவை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை சார்பாகவூம் ஊர் மக்கள் அனைவர் சார்பாகவூம் அர்ஷாடுக்கு Team AliffAlerts வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.