நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 42 இலட்சத்து 68 ஆயிரத்து 64 பேர் தற்போது வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பு மாவட்டத்தில் 15 இலட்சத்து 12 ஆயிரத்து 670 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 15 இலட்சத்து 38 ஆயிரத்து 368 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 8 இலட்சத்து 53 ஆயிரத்து 609 பேரும், கண்டி மாவட்டத்தில் 10 இலட்சத்து 2 ஆயிரத்து 493 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 796 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 4 இலட்சத்து 88 ஆயிரத்து 133 பேரும், காலி மாவட்டத்தில் 7 இலட்சத்து 90 ஆயிரத்து 207 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 95 ஆயிரத்து 868 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 42 ஆயிரத்து 60 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 82 ஆயிரத்து 342 பேரும், வன்னி மாவட்டத்தில் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 409 பேரும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேரும், திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேரும்,
குருணாகல் மாவட்டத்தில் 12 இலட்சத்து 16 ஆயிரத்து 286 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 17 ஆயிரத்து 557 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 6 ஆயிரத்து 508 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 365 பேரும்,
பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 91 ஆயிரத்து 292 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 557 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 814 பேரும், கேகாலை மாவட்டத்தில் 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 பேரும் இவ்வாறு இறுதியாண்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும் 18 தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக 94 ஆயிரத்து 611 வாக்காளர்கள் மேலதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 04 தேர்தல் மாவட்டங்களில் மொத்தமாக 48 ஆயிரத்து 837 வாக்காளர்கள் குறைவடைந்திருக்கிறார்கள்.
கொழும்பு மாவட்டத்தில் 29 ஆயிரத்து 821 வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 449 வாக்காளர்களும், வன்னி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 40 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 527 வாக்காளர்களும் என இவ்வாறு குறைவடைந்துள்ளனர்.
அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 805 வாக்காளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 983 வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 686 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 684 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 583 வாக்காளர்களும், காலி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 677 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 90 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 858 வாக்காளர்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 349 வாக்காளர்களும், திகாமடுல்ல மாவட்டத்தில் 5 ஆயிரத்து 139 வாக்காளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 963 வாக்காளர்களும், புத்தளம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 843 வாக்காளர்களும், அநுராதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 234 வாக்காளர்களும்,
பொலனறுவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 871 வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் 951 வாக்காளர்களும், மொனராகலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 105 வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 478 வாக்காளர்களும்,
கேகாலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 312 வாக்காளர்களும் மேலதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 29 ஆயிரத்து 821 வாக்காளர்கள் குறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய எண்ணிக்கையாக 8 ஆயிரத்து 805 வாக்காளர்கள் மேலதிகமாகப் பதிவாகியிருக்கின்றனர்.
