Aug 20, 2012
Holcim FA கிண்ணத்தை வென்றது கடற்படை அணி
Posted by AliffAlerts on 11:07 in SL | Comments : 0
ஹோல்சிம் சீமெந்து நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்ற எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டியில் ஸ்ரீலங்கா கடற்படை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
கடந்த 18ஆம் திகதி நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா கடற்படை கால்ப்பந்தாட்ட அணியும் ஸ்ரீலங்கா இராணுவ கால்ப்பந்தாட்ட அணியும் மோதின.
இதன் போது ஸ்ரீலங்கா கடற்படை அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தினையும் ஏழு இலட்சம் பெறுமதியான காசோலையையும் தனதாக்கிக்கொண்டது. இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவ கால்ப்பந்தாட்ட அணி 5 இலட்சம் பெறுமதியான காசோலையைப் பெற்றுக்கொண்டது.
