BREAKING NEWS

Aug 20, 2012

புதிய உலக அழகியாக சீன யுவதி தெரிவு


புதிய உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த யூ வென்ஸியா தெரிவாகியுள்ளார். சீனாவின் ஓர்டோஸ் நகரில் நடைபெற்ற 2012 உலக அழகிப் போட்டியில் நேற்றிரவு வென்ஸியா முடிசூட்டப்பட்டுள்ளார். கடந்த வருடம் உலக அழகியாக தெரிவான வெனிசுலாவை சேர்ந்த கோல்மனாரெஸ்இ வென்ஸியாவுக்கு கீரிடத்தை அணிவித்தார்.

வேல்ஸை சேர்ந்த சோபி மௌல்ட்ஸ் இரண்டாமிடத்தையும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸிகா கஹாவத்தி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இந்திய அழகி வான்யா மிஸ்ராவுக்கு மிஸ் சோஷல் மீடியாஇ மிஸ் பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய இரு பட்டங்கள் கிடைத்தன.
உலக அழகியாக யூ வென்ஸியா அறிவிக்கப்பட்டவுடன் சீன நகரங்கள் பலவற்றில் வான வேடிக்கைகள் இடம்பெற்றன. 23 வயதான வென்ஸியா சங்கீத ஆசிரியை ஆவார்.

'நீங்கள் ஏன் உலக அழகியாக தெரிவாக வேண்டும் என்ற கேள்விக்கு வென்ஸியா பதிலளிக்கையில்இ 'நான் சிறுமியாக இருந்தபோது மிகவும் அதிஷ்டசாலியாக உணர்ந்தேன். ஏனெனில் பலர் எனக்கு உதவினார்கள். அதேபோன்று நானும் மேலும் பல சிறார்களுக்கு உதவி செய்து அவரக்ளை அதிஷ்டசாலிகளாக உணரவைக்க முடியும்' எனக் கூறினார்.

இப்போட்டியில் 116 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். இதுவரை எந்தவொரு வருடத்திலும் உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட அழகிகளின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். இம்முறை உலக அழகிப்போட்டி இறுதிநிகழ்வை உலகெஙகும் சுமார் 100 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் பார்வையிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &