BREAKING NEWS

Aug 20, 2012

பறகஹதெனியவின் முதலாவது இணைய செய்திச் சேவை



அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்….. காலத்தின்  தேவையூம்  தொழில்நுட்பத்தின் வளர்ச்சியூம்  மக்களை  புதியதொரு  பாதையில் வழிநடாத்திக்கொண்டிருக்கும்  காலமிது.  இன்று  ஊடகத்துறையானது பல்வேறு  ரீதியில்  மக்களின்  வாழ்க்கையை  தீர்மானிக்கும் முக்கிய சாதகமாக மாறியூள்ளது. இது மக்களின் அறிவூத்திறனை விருத்தி செய்தல், தகவல் அறிதல், வாழ்வாதாரம் , பொழுதுபோக்கு, தொழில் என பரந்தளவில் இதன் பயன்பாடுகள் காணப்படுகின்றன. இந்நவீன ஊடகத்துறையானது, எமது அரசியல் பொருளாதார, சமூக, கலாச்சார, விழுமியங்களிலும் தாக்கங்கள் பலவற்றை ஏற்படுத்தியூள்ளது என்றால் அதில் எவ்வித தவறுமில்லை.

நவீன ஊடகத்துறையானது, அதிகளவில் இலத்திரனியலுடனேயே காணப்படுகின்றது. அதாவது, நவீன ஊடக்தை நேரடியாக இலத்திரனியல் ஊடகம் என்ற நாமத்தில் தான் கருதல் வேண்டும் அதாவது இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் வல்லமை இந்த இலத்திரனியல் ஊடகத்துக்கு இருக்கின்றது. சின்னஞ் சிறார்களிலிருந்து வயோதிபர்கள் வரை உபயோகிக்கக்கூடியளவில் இவ்விலத்திரனியல் ஊடகம் விருத்தியடைந்து காணப்படுகின்றது.

அந்தவகையில் வரலாற்றுப் புகழ் மிக்க எமது பறகஹதெனிய கிராமத்திற்கும் இப்புதிய மாற்றத்தின் இரசனையை சுவைக்கும் சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்ற நோக்கிலும், எமது சமூகத்தை ஒன்றிணைக்கத்தக்க சிறந்ததொரு ஊடகமாக இதனை பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கிலும், எமது பிரதேசத்துக்கு அப்பால் இருக்கும் எம்மவர்களுக்கு எமது கிராமத்தின் நிகழ்வூகள். எமது பாடசாலையின் பள்ளிவாயல்களின் நிகழ்வூகள், மட்டுமன்றி எமது நாட்டின் நிகழ்வூகள், சர்வதேசத்தின் முக்கிய நிகழ்வூகள்,  என்பவற்றை ஓரே நொடியில் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்ற நோக்கில் எமது சகோதரர்களின் வேண்டுகோள்களுக்கு தலைசாய்த்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுமுகமாக பறகஹதெனிய வரலாற்றின் இன்னுமொரு மைற்கல்லினை எட்டியவாறு AliffAlerts கடந்த வருடம் ஒக்டோபர் 14 ஆம் திகதி(2011-10-14) தனது கன்னிப் பயணத்தை குறுந்தகவல்கள்( TWITTER SMS)  மூலம் செய்திச்சேவை நடவடிக்கைகளை தொடங்கியது. மக்களது அதீத வரவேற்பை குறுகிய கால இடைவெளிக்குள் பெற்றுக்கொண்ட AliffAlerts  தமது குறுந்தகவல்(TWITTER SMS) செய்திச் சேவையை தமது கையடக்கத் தொலைபேசிகளுக்கும் உட்புகுத்திக்கொள்வது எப்படி என்று, பாரபட்சமின்றி ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தில் வாழும் பறகஹதெனிய கிராமத்து நம்மவர்கள் மட்டுமன்றி அயல் கிராமங்களில், நகரங்களில் உள்ளவர்கள்கூட கேற்குமளவூக்கு இதன் சேவையின் மகிமை வியாபித்தது அல்ஹம்துலில்லாஹ்… இறைவன் அருள் தொடர்ந்தும் அதிகமதிகம் கிட்டவேண்டும்.

அதற்கிணைவாக ஆரம்பிக்கப்பட்ட FACEBOOK  செய்திச்சேவையூம் அதிகளவில் அதாவது ஒரு வருடத்துக்குள் 5293(அதிகூடிய எண்ணிக்கையையூம் தாண்டி) வாசகர்கள் இணைந்துகொள்ளுமளவூக்கு பிரபலமடைந்தது. அதனால், AliffAlerts.com எனும் பெயரில் புதிய FACEBOOK PAGE ஒன்றையூம் ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்படுமளவூக்கு எமது வாசகர்கள் எம்முடன் இணைந்துகொண்டு எமக்கு புத்துயிரளித்தார்கள்.

இதன் மூன்றாவது கட்டமாக எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை www.aliffalertsnews.com கடந்த 19ஆம் திகதி (2012-08-19) நோன்புப் பெருநாளன்று நாம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம்  இதன் மூலம் முன்னையதை விடமும் பரந்தளவில் எமது சேவையை வியாபிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி எமது பிரதேசத்தில் பாடசாலையில் பள்ளிவாயல்களில் இடம்பெறும் சகல நிகழ்வூகளையூம் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் தேவையான வசதிகளை நாம் தயார்படுத்தி வைத்திருக்கிரோம் அதன் ஆரம்ப பரீட்சார்த்த ஒளிபரப்பாக பறகஹதெனிய ப்ரீமியர் லீங் இறுதிப்போட்டியை கடந்த 17ஆம் திகதி (2012-08-17) www.aliffalertsnews.com எமது இணையத்தளத்தினுடாக நாம் மிகவூம் துள்ளியமான முறையில் வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்தோம் அதனை 7ற்கும் அதிகமான நாடுகளிலிருந்து எமது பறகஹதெனிய சகோதரர்கள் நேரடியாக கண்டுகளித்தது மட்டுமன்றி எம்முடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எமது செய்திச்சேவைக்கு உங்களுக்கு தெரிந்த தகவல்களையூம், சகலவிதமான செய்திகளையூம் எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுத்தருவதன் மூலம் எமது பயணத்திற்கு உதவூவதுடன் ஒத்துழைப்பையூம் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்ரோம். மேலும் உங்களது சகலவிதமான (அனுமதிக்கப்பட்ட) விளம்பரங்களையூம் எமது இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தவூம் நாம் தயாராக இருக்கின்ரோம். அத்துடன் எவ்வித அரசியல் பேதங்களுமின்றி பொதுவான முறையில் எமது செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம் என்பதையூம் தெரிவித்துக்கொள்கின்ரோம்.

Team AliffAlerts
www.aliffalertsnews.com
alertsaliff@gmail.com, paragahadeniyasl@gmail.com

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &