BREAKING NEWS

Aug 21, 2012

மறுஅறிவித்தல்வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும்


நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் யாவும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள்இ பணிப்பாளர்கள்இ கல்வியியலாளர்கள் உட்பட அனைத்து  நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளும் நேற்று திங்கட்கிழமை சந்தித்துஇ பல்கலைக்கழக பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் இதன்போதுஇ பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

 உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில்இ 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ்இ மறு அறிவித்தல்வரை பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நான் தீர்மானித்தேன் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &