Aug 17, 2012
சனிக்கிழமை மாலை நோன்புப் பெருநாளுக்கான பிறை பார்க்கவும்
Posted by AliffAlerts on 23:55 in NL | Comments : 0
சனிக்கிழமை மாலை நோன்புப் பெருநாளுக்கான பிறை பார்க்கவும்
நோன்புப் பெருநாளுக்கான பிறை தீர்மானிக்கும் மாநாடு சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. ஹிஜ்ரி 1433 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து நோன்புப் பெருநாளை தீர்மானிக்கும் வகையில் சனிக்கிழமை மாலை 6.28 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல இலங்கை முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ,கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது .
