வரலாற்றுப் புகழ்மிக்க பறகஹதெனிய கிராமத்தின் பெரிய பள்ளி என்றழைக்கப்படும் ஜாமிஉல் அனவர் ஜும்மாப் பள்ளிவாயலின் மிள்கட்டுமானப் பணிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளியின் முழு கட்டடமும் தகர்க்கப்பட்டு புதியதொரு தோற்றத்தை வழங்குவதற்கான வேலைகள் கடந்த றமழானைத் தொடர்ந்து ஆரம்பமானது.
அந்தவகையில் அதன் கீழ் மாடியின் கட்டுமானப்பணிகள் நேற்று பூரணமாக்கப்பட்டதுடன் ஆரம்பமாக பெண்களுக்கான தராவீஹ் தொழுகையூம் நடாத்தப்பட்டது. கீழ்மாடியின் கட்டுமானப்பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது. அதன் முதற்கட்ட பணிகள் சுமார் 3மாதங்களுக்கு மன்பு நிறைவூற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழ் மாடியின் கட்டுமானப்பணிகளுக்கு இது வரை சுமார் ஒரு கோடி ரூபா செலவாகியிருப்பதாக பள்ளிவாயலின் செயலாளர் இர்ஷாத் அண்மையில் ஜும்மாத் தொழுகையை அடுத்து கருத்துத் தெரிவிக்கும்போது தெரிவித்தார் சுமார் 100 அடி நீளமும் 75 அடி அகலமும் nh;ண்டதாக பிரமாண்டமான முறையில் பள்ளிவாயல் அமையப் பெற்றிருக்கின்றது. மொத்தமாக மூன்று மாடிகளைக்கொண்டதாக பள்ளிவாயல் அமைய இருக்கின்றது. இதன்படி பார்க்கும் போது அண்மையில் ஒரு மார்க்ப் போதகர் தெரிவித் கருத்தின்படி கண்டி லைன் மஸ்ஜிதுக்கு அடுத்த படியாக இப்பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் மிகப்பெரிய பள்ளிவாயல் இதவாகும்.
இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் கீழ் மாடியின் இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கினற்ன என்பதும் குறிப்பிடத்தக்ககது.
Aug 17, 2012
பறகஹதெனிய ஜாமிஉல் அனவர் ஜும்மாப் பள்ளிவாயலின் ஆரம்ப கட்ட மீள்கட்டுமானப்பணிகள் நிறைவூ
Posted by AliffAlerts on 22:55 in NP | Comments : 0
