BREAKING NEWS

Aug 27, 2012

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியே கசிவு கம்பஹாவில் சம்பவம்

நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்துவிட்டு அப்பரீட்சையை உடனடியாக மீண்டும் நடத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர்கள் ஒன்றியம் கோரியுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியே கசிந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.இச்சம்பவம் கம்பஹா மாவட்ட பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் பரீட்சையின் 2 வினாக்கள் முழுமையாக மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.

 இவ்விடயம் தொடர்பாக தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &