BREAKING NEWS

Aug 23, 2012

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு அடுத்தவாரம் முடிவடையும்?


தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு அடுத்த வாரம் முடிவடைவதற்கான சாத்தியமுள்ளதாகஇ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையின்பின் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இப்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்இ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த யோசனைகளை அமுல்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையை  இரு தரப்பினரும் ஆரம்பித்துள்ளதாகவும் அச்சம்மேளனத்தின் தலைவர் நிமல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

எனினும்இ அடுத்த வாரம் பகிஷ்கரிப்பு நிறுத்தப்படும் என இப்போதே உறுதியாக கூற முடியாதென அவர் தெரிவித்ததுடன்இ கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து விபரிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &