BREAKING NEWS

Aug 23, 2012

இருபது-20 உலகக் கிண்ண இலங்கை அணியில் அக்கில் தனஞ்ஜய


இருபது-20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வீரர்களான டில்சான் முனவீர மற்றும் அக்கில் தனஞ்ஜய ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

தற்போது நடைபெறும் மஹேந்திர ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் டில்சான் முனவீர(23 வயது) ஊவா நெக்ஸ்ட் அணிக்காகவும் அக்கில தனஞ்ஜய (18 வயது) வயம்ப யுனைட்டட் அணிக்காகவும் விளையாடுகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள இருபது-20 உலகக்கிண்ண தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் தற்போது காயம் காரணமாக ஓய்விலிருக்கும் குமார் சங்கக்கார மற்றும் நுவான் குலசேகர ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர்.



இலங்கை அணியின் வீரர்களின் விபரம் வருமாறு

மஹேல ஜயவர்தன (அணித் தலைவர்)
ஏஞ்சலோ மெத்தியூஸ் (உப அணித் தலைவர்)
குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்)
திலகரட்ண டில்சான்
லயிரு திரிமனே
ஜீவன் மென்டிஸ்
திசர பெரேரா
லசித் மாலிங்க
நுவான் குலசேகர
ரங்கன ஹேரத்
அஜந்த மென்டிஸ்
தினேஸ் சந்திமால்
சமிந்த ஹேரங்க
அக்கில தனஞ்ஜய
டில்சான் முனவீர

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &