BREAKING NEWS

Aug 24, 2012

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இம்முறை 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவிருக்கும் நிலையில் பறகஹதெனிய தேசியப் பாடசாலையிலிருந்து இம்முறை பரீட்சைக்கு சுமார் 143 மாணவர்கள் தோற்ற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 58 மாணவர்களும் 85 மாணவிகளும்; அடங்குகின்றனர். நான்கு வகுப்புகளாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் விடுமுறை தினங்கள் மற்றும் இரவூ வேளைகளில்கூட பரீட்சை வழிகாட்டல் மேலதிக வகுப்புக்கள நடாத்தப்பட்டிருப்பதுடன் இதுவரையில் இம்மாணவர்களுக்கு 150க்கும் அதிகமான மாதிரிப் பரீட்சைகளும் 40க்கும் அதிகமான கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் 8 மாணவர்கள் மட்டுமே சித்தியடைந்திருந்த நிலையில் இம்முறை அதைக்காட்டிலும் மிக்க அதிக பெறுபேற்றினை எதிர்பார்ப்பதாக அதிபர் தெரிவித்தார்.

பகுதித் தலைவர் முனவ்வரா ஆசிரியையின் வழிகாட்டலில் ஆசிரியைகளான நௌபா நயிமா ரொஷானா மற்றும் ருமைஸா ஆகியோர் இவர்களது பொறுப்பாசிரியர்களாக இருந்து அயராது தகுந்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கின்றனர்.

இருந்தாலும்கூட இந்த 143 மாணவர்களுள் 75 மாணவர்களது பெற்றார்கள் இதுவரை பாடசாலைக்கு எவ்வித கூட்டங்களுக்கும் வருகை தந்திரவில்லை என்பதும் மேலதிக வகுப்புக்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பி வைக்கவில்லை என்பதும் மிகவூம் கவலைக்கிடமான விடயமாக இருந்துகொண்டிருக்கின்றது. அதாவது 50 வீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்களது பெற்றார்கள்  தமது பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகள் பற்றி எவ்வித அக்கரையூம் இல்லாமல் பொடுபோக்காக இருக்கினறமை மிகவூம் கவலைக்கிடமான விடயமாகும்

இந்நிலையில் குறித்த ஒரு சில பெற்றார்கள்  மற்றும் அதிபர்கள் பகுதித் தலைவர் மற்றும் பொறுப்பாசிரியைகளின் முயற்சியில் இவர்கள் இம்;முறை பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றனர்.எது எவ்வாறிருப்பினும் எமது சமூகம் கல்விக்கு காட்டும் கண்ணியமும் முக்கியத்துவமும் வெகுவாக குறைந்து வருவது எமது சமூகத்தின் வழிகேட்டுக்கும் பிரிவினைக்கும் வழிகோரும் பிரதான காரணமென்பது எமது சமூகத்துக்கு விளங்காமல் இருப்;பது மிகவூம் வருத்தத்துக்குரிய விடயமாகும்.

பறகஹதெனியவைப் பொறுத்தவரையில் எமது பெற்றார்கள்  கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் கரிசனையூம் வெகுவளவில் குறைந்துள்ளது. இது பறகஹதெனியவின் எதிர்கால வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் மூலகாரணியாக அமையூம் என்பது மட்டும் நிச்சயம்.இதற்கு எமது ஊர்த் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில் இரண்டு பிரதான பள்ளிவாயல்களின் பொறுப்புதாரிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இதற்கு பூரண பொறுப்புடையவர்கள். எமது சமூகத்தின் சீர்கேட்டுக்கு இவர்களது பொடுபோக்கும் முக்கிய காரணியாகும்.

இவர்கள் இன்றில்லாவிடினும் ஒரு நாள் இதனை விளங்குவார்கள். அதுவரை சமூகம் உறுப்படுமா??? என்பது சந்தேகத்துக்குரிய விடயம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &