BREAKING NEWS

Aug 22, 2012

மீண்டும் கால்பந்தாட்ட வசந்தம் பறகஹதெனியவில்


கல்பந்தாட்டத்துக்கு பிரபலமான பறகஹதெனிய மண்ணில் கால்பந்தாட்ட வீரர்களின் திறமைகளுக்கு பெறுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பறகஹதெனிய இண்டர் க்ளப் சம்பியன்ஸ் லீங் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்போட்டித் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

குருநாகல் மாவட்ட தலைவர் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு முன்னதாக இப்போட்டி ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதன் காரணத்தினால் திறமைமிக்க சிறந்ததொரு அணியை தெரிவூசெய்வதற்கு இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழக தெரிவாளர்கள் இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்தினால் நிச்சயமாக அனைவரும் எதிரபார்க்கும்  குருநாகல் மாவட்ட சம்பியன்ஸ் பட்டத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் இலவன் ஸ்டார்ஸ் அணிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறிருப்பினும் பறகஹதெனிய கல்பந்தாட்ட வீரர்கள் தமது திறமைகளை செவ்வனே வெளிப்படுத்தி தேசிய மட்டத்துக்கு செல்ல வேண்டுமென்பதே எமது ஆசை.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &