பொது பல சேனாவில் உள்ளவர்கள் பெளத்த சமயத்தலைவர்கள் அல்லவெனவும் அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நாழிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொது பல சேனா அமைப்பிலுள்ளவர்கள் யார் ? அவர்கள் பெளத்த சமயத்தலைவர்கள் அல்ல.அத்துடன் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனைக்கேட்டு சிங்களவர்கள் ஏமாறவும் மாட்டார்கள்.
பொது பல சேனாவால் நாட்டின் சிங்களவர்களை ஏமாற்ற முடியாது. எனினும் அவர்களது செயற்பாடு நாட்டின் முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.
நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் ஹலால் உணவை உண்ணும் வகையிலான விஷேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். சட்டத்தை மீறும் வகையில் பொது பல சேனா செயற்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்துள்ளார்.
