BREAKING NEWS

Sep 16, 2013

நெருக்கடியில் சிரியாவின் மருத்துவ சேவைகள்

சிரியாவில் அனைத்து தரப்பினரும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் உலகளவில் மருத்துவத்துறையில் உள்ள ஐம்பது வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லாண்செட் எனப்படும் மருத்துவ பத்திரிகையில் அவர்கள் எழுதியுள்ள ஒரு பகிரங்கக் கட்டுரையில், சிரியாவின் மருத்துவ சுகாதாரக் கட்டமைப்புகள், திட்டமிட்ட வகையில் தெரிந்தே நடத்தப்படும் தாக்குதலால் சீர்குலைந்து போயிவிடக் கூடிய நிலையில் உள்ளன என்று அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு மருத்துவ வசதிகள் சரி செய்ய முடியாத அளவுக்கு முறிந்து போகக் கூடிய நிலையின் விளிம்பில் உள்ளன எனவும அவர்கள் சுட்டுக்காட்டியுள்ளனர்.

நோய் பரவும் ஆபத்து

நாட்டில் நடைபெறும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும், பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் லான்செட் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் அந்த மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மிகவும் மோசமான காயங்களுக்கு மருத்துவ உதவகள் கிடைப்பதில்லை எனவும், மயக்க மருந்தின் உதவியின்றியே அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில், சிறார்களுக்கு தடுப்பூசிகள் போட முடியாமல் உள்ளதால், இப்படியான ஒரு அசாதாரண சூழல் காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளன எனவும் அந்த மருத்துவ வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பங்கிரங்கக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளவர்களில் நோபல் பரிசு பெற்ற மூன்று வல்லுநர்களுடம் அடங்குவர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &