BREAKING NEWS

Mar 16, 2013

ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்! (படங்கள்)

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக நடமாடும் பள்ளிவாயல், பாடசாலை, பஸ் தரிப்பிடம், வர்த்தக ஸ்தபானங்கள் ஆகியவற்றில் ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் என்ற பெயரில் பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம் எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அச்சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம்.
ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்.
கடைகளில் புகைத்தல் பொருட்கள் விற்பதை தடை செய்யுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு (பறக்கத்) அருள் புரிவானாக.

என்று அவ்விரு சுவரொட்டிகளில் குறிப்படப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &