BREAKING NEWS

Mar 17, 2013

ACJU KURUNEGALA ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வூ (PHOTOS)


ACJU KURUNEGALA கிளையின் ஏற்பாட்டில் நாட்டின் தற்போதைய முஸ்லிம் விரோத நிலவரம் பற்றியூம் முஸ்லிம்கள் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் பற்றியூம் தௌpவூட்டுவதற்கான விஷேட ஒன்றுகூடல் நிகழ்வூ இன்று 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் பி.ப 02.30 மணி வரை தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளியில் இடம்பெற்றது.

ஏராளாமான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வின் பிரதம வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிச் செயலாளரும் ஹலால் பிரிவின் தலைவருமான அஷ்ஷேய்க் முர்ஷித் முலஃப்பர் அவர்கள் கலந்துகொண்டதுடன் விஷேட அதிதிகளாக முன்னைய நாள் முஸ்லிம் கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தற்போதைய உயர்கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளருமான அஷ்ஷேய்க் நவவி அவர்களும் முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் தலைவர் அல்ஹாஜ் என் எம் அமீன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் குருநாகல் கிளைத் தலைவர் அஷ்ஷேய்க் சித்தீக் அவர்களும் செயலாளர் இஷ்ஹாக் லெப்பே அவர்களும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் சத்தார் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா  மற்றும் அஷ்ஷேய்க் நவவி ஆகியோரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரை நிகழ்த்திய அஷ்ஷேய்க் முர்ஷித் முலஃப்பர் அவர்கள்  AsSheikh Murshid Mulafarதற்போதைய பிரச்சினையின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலவரம் வரை நடந்த சகல விடயஙூகளையூம் மிகத்தௌpவாக விவரித்ததுடன் முஸ்லிம்களாகிய நாம் இவ்வாறான சந்தரப்பங்களில் எவ்வாறு பொறுமையாகவூம் விட்டுக்கொடுப்புடனும் அமைதியாகவூம் நடந்துகொள்வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். அத்துடன் இன்று நாம் இவ்வாறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதற்கான பிரதான காரணம் நாம் இஸ்லாத்தை எமது வாழ்க்கiயிலும் குடுபத்திலும் எடுத்து நடக்க முற்பட்டதேயன்றி எமது ஏனைய சமூகங்களுக்கு தௌpவூபடுத்துவதற்கு எவ்விதத்திலும் முயற்சியெடுக்காமையே எனக்கூறியதுடன் நாம் இன்று ஏனைய மக்களிடத்திலிருந்து தனிப்பட்டே (ISOLATION)வாழ்கிறௌம் அல்லது அவர்களுடன் எவ்வித பேதமுமின்றி மார்க்த்தை மறந்த நிலையில் (ASSIMILATION) வாழ்கிறௌம் இவ்விரண்டுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத விடயங்கள் நாம் எமது IDENTITY தக்கவைத்துக்கொண்டு எமது நல்ல தன்மைகளைஅவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நன்னடத்தைகளை அவர்களுக்கு முன்வைப்பதன் மூலம் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் எனினும் அவர்களுடன் எமது நன்னடத்தைகளை இலகுவாக அவர்களுக்கு தெரிவிக்கத்தக்க ஊடகம் தான் அவர்களுடனான கொடுக்கல்வாங்கல் இதன்மூலம் எம்மை அவர்களுக்கு சிறந்த முறையில் விபரிக்கலாம். எனினும் அதற்கு மாறாக எமது சகோதரர்கள் எமது முஸ்லிம் சமூகத்துடனான வர்த்தகத்தை கொடுக்கல் வாங்கல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் எண்ணுமளவூக்கு மோசமான முறையில் நடந்துகொள்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்  நாம் எமது IDENTITY தக்கவைத்துக்கொண்டு அவர்களோடு சேர்ந்து நடப்பது கட்டாயமாகும்.

மேலும் நாம் எம்மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எவ்வித இயக்க பேதங்களுமின்றி நாம் ஒரே உம்மத் என்ற வகையில் ஒன்றுபட்டிரல் கட்டாயமாகும். நாங்களே எம்மைக் காட்டிக்கொடுக்கக்கூடியவர்களா எமது சமூகத்தை பிளவூபடுத்தக்கூடியவர்களாக ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. அல்ஹம்துலில்லாஹ் அண்மையில் பாதுகாப்பு செயலகத்தினால் எமது முக்கியமான 25 முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றுதிரட்டப்பட்டு ஒரு ஒன்றுகூடல் பாதுகாப்பு செயலகத்திலே இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது பொதுவாக 2 கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
1. நீங்கள் ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அவர்கள் தேவையா?
2. ஹலால் விடயம் ஜம்இய்யத்துல் உலமாவினால்தானே செய்யப்படுகின்றது இதனால்தானே எல்லாப் பிரச்சினையூம் இதனை இல்லாமாலாக்கிவிட்டால் சரி தானே இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அல்லாஹு அக்பர் இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒருமித்த குரலில் இலங்கையின் நகல அமைப்பினர்களும்
1. நாம் வெவ்வோறாக செயற்பட்டாலும் ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனை மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகின்றௌம். அவர்களே எம்மை வழிநடாத்துபவர்கள்

2. எமது நாட்டில் கட்டாயம் ஹலால் இருத்தல் வேண்டும் ஜம்இய்யத்துல் உலமா இது எமக்காக எமது சமூகத்துக்காக செய்யூம் மாபெரும் சேவை என தெரிவித்தமை எமக்கு பாரிய சக்தியாகும். இந்த ஒற்றுமை என்றும் எம்மத்தியில் இருக்க வேண்டும். நாம் ஒன்றுபட்டிருந்தால் பொறுமையாக இருந்தால் பத்ஹ் மக்காவைப் போன்று எமக்கு வெற்றி காத்திருக்கின்றது. எனினும் நாம் சற்றுபொறுமையூடனும் அமைதியூடனும் இபாதத்துக்களுடனும் காத்திருத்தல் வேண்டும் என அஷ்ஷேய்க் முர்ஷித் முலப்பர் அவர்கள் தமது உரையின்போது தெரிவித்தார்கள்.

அத்துடன் இந்நிகழ்வின் இறுதியில் முழு குருநாகல் மாவட்டத்தையூம் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையிலான புதிய நிர்வாகக்கட்டமைப்பொன்றை நிறுவூவதன் முக்கியத்துவம் பற்றிஅப்துல் சத்தார் அவர்கள் பரிந்துரைத்ததன் பிரகாரம் சகல கிராமங்களும் அடங்கலாக பேதமின்றி எமது சமூகத்தை வழிநடாத்தக்கூடியவகையிலான நிர்வாகக்கட்டமைப்பு நிறுவூவதன் அவசியத்தை நவவி அவர்கள் முன்வைத்தார்கள். அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் கிளை ஒவ்வொரு கிரமங்களுக்கும் சென்று அதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ளும் என்ற உறுதிமொழியூடன் சுமார் 2.30 மணியளவில் நிறைவூபெற்றதுடன் வந்திருந்தவர்களுக்கான மதிய உணவூம் வழங்கப்பட்டது.













Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &