BREAKING NEWS

Mar 15, 2013

17ம் திகதி கண்டியில் BBS கூட்டம் நடை பெறுவதில் சிக்கல்?


எதிர் வரும் 17ம் திகதி கண்டியில் பொது பல சேனா கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் சில அரசியல்வாதிகள், மதகுருமார்கள், , வர்த்தகர்கள் பொது பலசேனா இக்கூட்டத்தை பொது இடத்தில் வைப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதனை கருத்திற்கொன்டு இந்த முஸ்லிம் எதிர்ப்பு கூட்டத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும்,
ஒரு பொது இடத்தில்,திறந்த வெளியில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட உள்ளதால் இவர்களின் பொதுக்கூட்டத்தை கண்டி பொது சந்தைக்கு வெளியில் வைக்காமல் ஒரு உள்ளக அரங்கில் வைத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விட்டிருப்பதாகவும் எமது செய்தி சேவைக்கு பலர் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில  தினங்களாகவே முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்தும் செயல்கள் கண்டியில் பகிரங்கமாகவே நடை பெருகின்றன என்பதையும்  நாம் அறிவோம். 
இக்கூட்டத்திலேயே முஸ்லிம் பெண்களின் ஆடையான புர்காவுக்கு எதிரான போராட்டமும் இதன்போதே ஆரம்பிக்கப்படுமென பொதுபல சேனா அறிவித்துள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
இது தொடர்பிலான உண்மை நிலையை அறிய மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் காரியலத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரை நாம் சற்று முன் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். இருந்தும் அவரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
அவரை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்துகிறோம்.
துஆ செய்வோம். எல்லாம் வல்ல இறைவன் எம்மை காப்பாற்றுவான்.
(கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மெல்சிரிபுரவில் பொது பல சேனா ஏற்பாடு செய்த ஆர்பாட்டமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது)


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &