கூரகல பள்ளிவாசலை இடித்துத் தகர்க்கும் நோக்கில் ராவணா பலய திட்டமிட்டு வருவதாக கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றத்திற்கு மத்தியில் அப்பிரதேசத்தின் சிங்கள மக்களே குறித்த இனவாத செயல்களைக் கண்டித்து பதாதைகளை வைத்திருந்ததோடு இன்றைய தினம் பொலிசாரோடு ஒத்துழைத்து இனவாத ராவணா பலயவை விரட்டியடிப்பதற்கு உதவியுள்ளனர்.
ராவணா பலயவின் சிங்ஹல ராவய பிரிவினர் வாகனங்கள் வந்த பாதையில் பிரதேச மக்கள் டயர்களை வைத்து தடங்கலை உருவாக்கி அந்த இடத்திலேயே அவ்வமைப்பினரைத் திருப்பியனுப்ப உதவியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்விடயத்தினைக் காட்சிப்படுத்தியுள்ள ஹிரு தொலைக்காட்சியின் காணொளியிலும் பிரதேச மக்கள் இங்கே இனப் பிரிவினையை உண்டாக்க வேண்டாம் என ராவணா பலய துறவிகளிடம் தெரிவிப்பதைக் காணலாம். இது தவிரவும் அங்கு “நாம் இலங்கையர்கள்” , இனவாதத்தை சிங்கள முஸ்லிம் பிரிவினையை உருவாக்கும் சக்திகளுக்கு எமது அனுதாபங்கள் என பதாதையொன்றும் காணப்படுவது இக்காட்சியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தகக்து.
Video Courtesy: HiruTV