BREAKING NEWS

Apr 4, 2015

வெற்றிகரமாக நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி



சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட மாதாந்த பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் வெற்றிகரமாக நேற்றைய தினம் இரவு (03-04-2015) நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் தம்மாம் இஸ்லாமிய நிலைய அழைப்பாளர் மவ்லவி ரிஸ்வான் ஸய்லானி அவர்கள் "நவீன ஊடகங்களும் முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என கிட்டத்தட்ட 75 பேர் வரை கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கூட சமூகமளித்தமை மிகவும் மகிழ்ச்சிக்குறிய விடயமாகும்.


மேற்படி நிகழ்வு வெற்றி பெற அனைத்து வகையிலும் உதவி நழ்கிய அனைத்து சகோதரர்களையும் இங்கு நாம் மிக நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.

அல் கப்ஜி தஃவா நிலையம்,
தமிழ் மற்றும் சிங்கள பிரிவு சார்பாக,
எம். றிஸ்கான் முஸ்தீன்







Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &