ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் ஆட்சி செய்து வரும் IS போராளிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் அமெரிக்க விமானப் படையினர் குர்திஷ் இராணுவத்தினருக்கு வானில் இருந்து கீழே போட்ட ஆயுத பொதிகளை ஐ. எஸ் போராளிகள் கைப்பற்றி உள்ளதை காணலாம்.
இதேவேளை குர்திஷ் இராணுவத்தினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை போடவில்லை. ஐ. எஸ் போராளிகள் உள்ள இடத்தில் அவர்களுக்கு உதவி செய்யவே இவ்வாறு ஆயுத பொதிகளை போட்டு இருப்பார்கள் என ஊடகங்களில் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.