40 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஈரானின் உள்ளூர் விமான சேவை ஒன்றுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தலை நகர் தெஹ்ரானில் விழுந்து நொறுங்கியுள்ளது. மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு வடக்காக இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. தலை நகர் தெஹ்ரானில் இருந்து வடக்கு நகரான தபாஸிற்குப் புறப்பட்ட இந்த உள்ளூர் பயணிகள் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது.
ஈரானின் விமாப் போக்குவரைத்துத் துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
"குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 48 பேர் இருந்துள்ளனர். அனைவரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக நம்புகின்றோம்" எனக் குறிப்பிட்டார்.
விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாரே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பருகின்றது.

