BREAKING NEWS

Aug 11, 2014

சகோதரனே கணவனாக மாறிய சம்பவம்


சிறுவயதில் தாயால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், தன் தாயைத் தேடிக் கண்டுபிடித்தபோது, தன்னுடைய கணவன் தான் தன்னுடைய சகோதரனும் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.


ஆட்ரியானோ என்ற பெண்மணி பிரேசிலில் வசித்து வருகிறார். இவரின் கணவர் லியான்ட்ரோ ஆவார். இவர்கள் இருவருமே சிறுவயதில் தங்களின் தாயால் கைவிடப்பட்டவர்கள். அவ‌ர்கள் இருவரும் பெரியவர்கள் ஆனவுடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் 7 ஆண்டுத் திருமண வாழ்வில் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இருவரின் தாயார் பெயரும் மரியா என்பதாகும். இது இருவருக்குமே தெரியும். எனினும், இது ஒரு யதேச்சையானது என்று நினைத்திருந்தார்கள். ஆனால் இருவருக்கும் தாயார் ஒருவரே என்பதை அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் தாயைத் தேடிக் கண்டுபிடிக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொண்டார் ஆட்ரியானோ. அதன் ஒரு பகுதியாக அவர் பிரேசிலின் பிரபல வானொலி நிலையமான ரேடியோ குளோபோவைத் தொடர்பு கொண் டார். நெடுங்காலமாகத் தங்களுடன் தொடர்பில்லாத உறவினர்களை அவரவர் குடும்பத்துடன் சேர்த்து வைக்கும், ‘ஏஞ்சல் ஆஃப் மீட்டிங்ஸ்’ எனும் தினசரி நிகழ்ச்சி அந்த வானொலியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்ரியானோ இறுதியில் தன் தாயைக் கண்டுபிடித்தார். ஆனால் அந்த இனிமை விரைவிலேயே கசப்பாக மாறியது. காரணம், தன்னுடைய தாய்தான் தன் கணவரின் தாயும் என்பதை அறிந்தார் ஆட்ரியானோ. தன் சகோதரனே தனக்கு கணவனாக உள்ளார் என்பதை அறிந்து அவர் அதிர்ந்துபோனார்.


எனினும், இதனால் தங்க ளின் திருமண வாழ்க்கை பாதிக்க வில்லை என்றும், இருவரும் தொடர்ந்து இணைந்திருக்கப் போகிறோம் என்றும் அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &