இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களது பெற்றோர்களுக்கான விஷேட கூட்டமொன்று இன்று பறகஹதெனிய தேசியப் பாடசாலையில் அதிபர் பிரிவுத் தலைவர் மற்றும் வலய கல்விப் பணிமணை ஆசிரிய ஆலோசகர் (சிங்கள) ஒருவரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது முக்கிய பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பெற்றோர்களுக்கு நன்றி பாராட்டலும் இடம்பெற்றது.
இம்முறை சுமார் 147 மாணவர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த அதிபர் மாணவர்களை பாராட்டியதுடன்ää கடந்த முறையைப் போன்றல்லாது இம்முறை மாணவர்கள் சிறந்தமுறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட வினாத்தாள்களுக்கு பதிலளித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். அத்துடன் சமார் 15 மாணவர்களாவது இம்முறை சித்தியடைவர் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பெற்றோர்கள் என்றவகையில் 10000 - 15000 ரூபா அளவில் தமது பிள்ளைகளுக்காக வினாத்தாள்களுக்கும் எனையவற்றுக்கும் செலவளித்திருக்கின்றமை குறிப்பிடப்பட்டது. அதே நேரம் தாம் மிகவும் கஷ்டப்பட்டு மாணவர்களுக்கு மிகவும் சிரமத்துடன் தமது கையால் காசு செலவளித்து செயற்பட்டிருப்பதாகவும் போலியாக பெருமை பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது. ( அத்துடன் பெற்றோர்களிடமிருந்து அதிகளவில் நன்கொடைகளை பெற்றுக்கொண்டமையை இறங்கு நினைவுபடுத்த அவர் மறந்ததுவிட்டார் போலும்) அத்துடன் கனிஷ்ட பிரிவிற்காக வீசி தோட்டத்தில் பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபொதும் அது இன்னும் வெற்றியளிக்கவில்லை என்பதையும் (சந்தோஷமாக) நினைவுபடுத்தினார்.
இங்கு உரை நிகழ்த்திய ஆசிரிய ஆலோசகர் சிங்களத்தில் உரை நிகழ்த்தியதுடன் இங்கு அதிகமான வினாத்தாள்களுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு மேலதிகமாக வினாத்தாள்களுக்கு முகங்கொடுத்தாலும் எதிர்பார்க்கின்ற பெறுபேறு கிடைப்பதில்லை. எனினும் இவ்வருடம் அதிக பெறுபேற்றை பெறலாம் மாணவர்கள் திறமையானவர்கள் என அதிபர் எமக்கு குறிப்பிட்டுருக்கின்றார். பெற்றோர்களும். அதிகளவில் பணத்தை செலவளித்திருக்கின்றார்கள். மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவத்துக்கொள்கின்றோம். சென்ற முறையைப் போன்றல்லாது சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுக்க நல்வாழத்துக்ககள் என்று சிங்களத்தில் தெரிவித்தார்.
அடுத்து உரை நிகழ்த்திய பிரிவுத் தலைவர் முனவ்வரா ஆசிரியர் அவர்கள் மாணவர்களை தியாகத்தை பாராட்டியதுடன் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார. அத்துடன் இப்போது தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கடந்து இரண்டு வார காலமாக பரீட்சை வினாத்தாள்களை வழங்கி அவர்களை தயார்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சுமார் 5 வலுடங்களாக தாம் பிரிவுத் தலைவராக கடமையாற்றி வருவதாகவும் எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வுபெறுவதாகவும் நினைவூட்டினார். இத்துடன் மாணவர்களது மனநிலையை சீராக பேணுவதற்கு பெற்றோர் கவனம் செலுத்தும் படியும் இறுதியாக பிரிவுத் தலைவர் பெற்றோர்களை கேட்டக்கொண்டார்.சுமார் 10 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
Team AliffAlerts சார்பாக புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.