BREAKING NEWS

Aug 5, 2014

மதீனா பல்கலைக்கு செல்ல இலங்கை உலமாக்களுக்கு அதிக வாய்ப்பு

Madeena University logo
அல் ஜாமிஆ அல் இஸ்லாமியா மதீனா பல்கலைக்கழகத்துக்கு இலங்கையிலிருந்து உயர் கல்விக்காக உலமாக்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் மற்றும் அல்மனார் நிறுவனங்களின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) கூறினார்.
எமது நாட்டில் அரபுக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்து சர்வதேச ரீதியான அங்கீகாரம் பெற்ற பட்டமொன்றினை பெறுவதினூடாக உலமாக்கள் தங்களது வாழ்க்கைக்கு மிகச்சிறந்த வல்லபத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் சவூதி அரச மற்றும் மதீனா பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் இவ்விதம் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள விரும்புவோர் www.iu.edu.sa அல்லது www.almanarkz.org எனும் வலைத்தளங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமமிருப்பின் காத்தான்குடி, கடற்கரை வீதியிலமைந்துள்ள அல் மனார் நிறுவனத்திற்கு நேரடியாக சமூகம் தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
க.பொ.த. உயர் தர சான்றிதழுள்ள 25 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் இப்பல்கழைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியும். மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 077 1389780 அல்லது 071 8080156 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றார்கள்.
விண்ணப்பித்தவர்கள் அனைவரும் குறித்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இலக்கங்களை மேற்கூறிய இரு தொலைபேசிகளிலொன்றுக்கு தெரியப்படுத்துமாறும் அறிவிக்கப்படுகிறது.
இதற்கான நேர்முகப்பரீட்சை இன்ஷா அல்லாஹ் இம்மாத இறுதிப்பகுதியில் இலங்கையில் இடம்பெற ஏற்பாடாகியிருப்பதாகவும் மும்தாஸ் (மதனி) கூறினார். இதற்கென சவூதி அரேபிய மதீனா பல்கலைக்கழக புத்திஜீவிகள் குழுவொன்று இலங்கை வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &