மும்பையில் ஓடும் ரயில் ஒன்றில் கைபேசி வெளிச்சத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த பூஜா (23), நிறைமாத கர்ப்பிணியாக தன் குடுபத்தினருடன் நாக்பூர் மாவட்டம் விதர்பா செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணி அளவில் திடீரென பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனே ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் கொடுத்தையடுத்து, அவர் அதே ரயிலில் பயணம் செய்த மருத்துவர் அனில் மோரேவிடம் சிகிச்சை அளிக்க கோரியுள்ளார்.
உடனடியாக டாக்டர் அனில், பூஜா பயணம் செய்த பெட்டிக்கு விரைந்து வந்தபோது அங்கு மின் விளக்கு எரியாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் மருத்துவர் அனில் தனது கைபேசியை எடுத்து அதன் வெளிச்சத்திலேயே பிரசவம் பார்த்ததில் பூஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும், சரியான நேரத்தில் உதவிய மருத்துவர் அனில் மோரேவுக்கு பூஜாவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளனர்.