இன்று 03 -07- 2014 வியாழக்கிழமை இப்தார் நேரடி ஒலிபரப்பினை பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாயலிலிருந்து முழு இலங்கைக்கும் நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிகள் பிரிவூ ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இவ்வாறான றமழான் இப்தார் விஷேட நேரடி ஒலிபரப்பு நிகழ்வூ பறகஹதெனிய பெரிய பள்ளி வாயலிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் அஷ்ஷேக் ஹஸன் றியாஸ் அப்பாஸி அவர்களது விஷேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன் ஊர் மக்களுக்கான இப்தார் வசதிகளையூம் எற்பாட்டுக் குழு செய்திருக்கின்றமை விஷேட அம்சமாகும்..