அளுத்கமவில் ஜூன் 15 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று சி. ஐ. டி யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
சம்பவ தினத்தன்று அளுத்கமவில் நடத்தப்பட்ட பொதுபலசேனா கூட்டத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரர் நிகழ்த்திய உரை மற்றும் பேருவளை. அளுத்கம சம்பவங்கள் குறித்தும் வாக்கு மூலங்களை சி. ஐ. டியினர் நேற்று அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
நேற்று நண்பகல் ஒரு மணி முதலே கலகொடஅத்தே ஞானசார தேரருக்கான சிஐடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அளுத்கம சம்பவம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதியன்று சிஹல ராவயே அக்மீமன தயாரத்ன தேரர் சி. ஐ.டி யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.
பொதுபலசேனாவின் அளுத்கம கூட்டத்தில் உரையாற்றிய ஏனைய உறுப்பினர்களையும் சிஐடி யினர் விசாரணைக்குட்படுத்தவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்,
“இலங்கை நீதிமன்றமாக இருக்கட்டும் குற்றப்புலனாய்வுதுறையாக இருக்கட்டும் உலகில் நூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த பண்டைய காலத்து முறையிலே இயங்குவதாகவும் வாக்குமூலம் பெறுவதற்காக மட்டும் பல மணி நேரம் எடுத்துகொண்டதாகவும் இது வீணான கால வீணடிப்பு எனவும் உலகம் எங்கோ போய்கொண்டிருக்கும் போது நாங்கள் எங்கு இருக்கிறோம் எனவும் விசனம் தெரிவித்தார் .

தானோ தமது அமைப்பினர்களோ ஒரு குன்டுசியை கூட கையில் எடுக்காத்தவர்கள் மனித உரிமை தொடர்பாக பேசும் உலக மகா போலீஸ்காரர்களுக்கு உண்மையான இனவாதிகள் யார் என இனங்கண்டுகொள்ள முடியாது போயுள்ளது என அமெரிக்காவின் மீதும் குற்றம் சுமத்தினார் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர்.
அந்த பேட்டியின் வீடியோவை பாருங்கள்.