BREAKING NEWS

Jul 27, 2014

இலங்கையில் திங்கள் கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடும் சகோதரர்கள்


கொழும்பு, பெரிய பள்ளி வாயிலில் இன்று கூடிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமையிலான ஷவ்வால் பிறை தீர்மானிக்கும் குழு நாளை மறுதினம் நோன்பு பெருநாள் கொண்டாடும் படி உத்தியோகப்பூர்வமாக அறிவித்த நிலையில் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று காத்தாங்குடி கொழும்பு ஆகிய பிரதேங்களில் சர்வதே பிறையை ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் நாளை பெருநாள் தினத்தை கொண்டாடுவதாக அறிவித்துள்ளனர்.

சுமார் ஒருமணி நேரத்துக்கு முன்னர் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்றுஆக்கிய பிரதேச சில பள்ளிவாயல்களில் பெருநாள் தக்பீர் முழங்ககியதாக எமக்கு அறியக் கிடைத்தது அட்டாளைச்சேனை சகோதரர் எம் ஜே எம் சஜீத்  இதனை உறுதிபடுத்தினார்.

குறித்த தக்பீர் முழக்கம் ஜாமியதுள் தர்பியத்தில் இஸ்லாம்மியா அமைப்பின் கீழ் இயங்கும் மஸ்ஜிதுன் ஹன்லாலா பின் ஆமிர் என்னும் பள்ளிவாயளிலேயே முழங்கியதாக அட்டாளைச்சேனை சகோதரர் எம் ஜே எம் சஜீத் தெரிவித்தார்.

இலங்கயில் உள்ள சர்வதேச பிறையை ஏற்றுக்கொண்டவர்களே நாளை பெருநாள் கொண்டாடுவதாக அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்(acju) முக்கிய அங்கத்தவர் ஒருவர்  தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &