BREAKING NEWS

Jul 27, 2014

29 ஆம் திகதி நோன்பு பெருநாள்

நாட்டின் எப்பாகத்திலும் இன்று பிறை தென்படாத காரணத்தினால் நாளை மறுதினம் 29 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் றமழான் நோன்பினை 30 நாட்களாக நாளை திங்கற்கிழமையூம் நோன்பினை நோற்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடவூள்ளனர்.

எனினும் மத்திய கிழக்கு நாடுகள் ஜப்பான் மலேசியா சிங்கப்பூர் அவூஸ்திரேலியா நியூசிலாந்து கொரியா தென்னாபிரிக்கா பீஜீ நைஜீரியா இந்தோனேசியா வட அமேரிக்க நாடுகள் இங்கிலாந்து உட்பட அநேகமான நாடுகள் நாளை திங்கற்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடவூள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &