BREAKING NEWS

Jun 10, 2014

அதிக எடை (Over Weight) மற்றும் அதீத எடை (Obese)

அதிக எடை என்பது பொதுவாக அனைவரும் நன்கறிந்ததே. அதாவது, சுருக்கமாக சொல்லப்போனால் தமது வயதின் அடிப்படையிலும் இன்னோரன்ன காரணங்களின் அடிப்படையிலும் தமது உடற்பருமன் (Kg) தமது உயரத்தினால் (M2வகுக்கும்போது வரக்கூடிய பெறுமானம் அதாவது, Body Mass Index (BMI)  25-30க்குள் இருப்பதைக் குறிப்பிடலாம். இவ்வாறு அதிக எடை கொண்டிருப்பதால் நாளாந்த நடவடிக்கைகளில் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை ஆனால், இந்த எடை அதிக எடையை விட அதீத எடையாக மாறும்போது அதாவது BMI பெறுமானம் 30ஐ விட அதிகரிக்கும்பட்சத்தில் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும். அத்துடன் பல்வேறு பக்கவிளைவாக ஏற்படும் நோய்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

அதீத எடை என்றால் என்ன?
அதாவது, Obese. BMI ஆனது 30 விட அதிகமாக இருக்குமெனில் அந்நிலமையை ழுடிநளந அல்லது அதீத எடை எனக் குறிப்பிடலாம். இவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்தவண்ணமே இருப்பார்கள் அதாவது,
•             குனிந்து ஒரு பொருளை எடுக்க முடியாமை
•             அதிக நேரம் நிற்க முடியாமை. மூட்டு வலி, முதுகு வலி
•             5 நிமிடங்கள் நடக்க முடியாது இளைப்பு
•             தொடர்ந்து பேச முடியாமை மூச்சுத் தினறல்
•             தூங்கும்போது குறட்டை விடல்
•             உற்சாகமின்மை
இப்படியாக சில அறிகுறிகளை கொண்டிருப்பார்கள். அதுமட்டுமன்றி இவற்றின் விளைவாக பாரதூரமான நோய் நிலமைகளை காலப்போக்கில் சந்திக்க நேரிடுவதும் உண்டு.

காரணங்கள் என்ன?
•             பரம்பரையாக உள்ள பருமன்
•             தைரொய்ட் பிரச்சினைகள்
•             பெண்களில் மாதவிடாய் குளறுபடிகள்
•             ஒரு சில மருந்து வகைகளின் பாவனை
•             சில வகை குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள்.
•             சில வகை உணவுகள்
•             அன்றாட வாழ்க்கை முறை (Life Style)

தீர்வாக வினைதிறனான முறைகள் ஏதும் உண்டா?
ஆம். உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி செய்தல் என்பன அனைவரும் அறிந்ததே. உண்மையில் ஒருவருக்கு இவை அவசியம் எனினும் இவற்றை தொடர்ச்சியாக செய்ய முடியாதவர்கள் என்னதான் செய்வது என்ற கேள்வி எல்லோருக்கும் எழலாம். ஆம்
உடல் வேலை செய்து வியர்வையை வெளியாக்கி அதன் மூலம் உடல் உஷ்னத்தைக் கூட்டி கொழுப்பைக் கரைப்பதைப் போலவே, உஷ்னத்தை கொடுத்து வியர்வையை உருவாக்கி கொழுப்பைக் கரைக்கும் (Burning Calories) முறைமை இயற்கை வைத்தியத்தில் காணப்படுகின்றது.

வாரத்தில் 2-3 முறைகள் 15-20 நிமிடங்கள் இச்சிகிச்சை முறையை மேற்கொள்வதன் மூலம் பெருமளவூ சக்திப் பெறுமானத்தை எரிப்பதன் (Burning Calories) மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதனை தொடர்ச்சியாக வாரத்திற்கு 2 அல்லது 3 முறைகள் மேற்கொள்வதுடன் மேலதிகமாக எவ்வித பக்கவிளைவுகளுமற்ற அநேகமாக சமையலறைகளில் அன்றாடம் உபயோகப்படுத்தப்படுகின்ற இயற்கை மருந்து வகைகளை உட்கொள்வதன் மூலம்  வயிறு, தொடை, கைகளில் உள்ள கொழுப்பை இலகுவாக குறுகிய காலத்தினுள் குறைக்கலாம்.
இது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது?
ஆம். இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் உபகரங்கள் மூலம் இலகுவாக கொழுப்பைக் கரைக்கலாம். அதாவது வியர்வையை உருவாக்கக்கூடிய அரிய பல மூலிகைகளைக் கொண்டு நீராவி மற்றும் உஷ்ணம் பிறப்பிக்கும் முறையாகும். இவை பொதுவாக SAUNA THERAPY மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற பக்கவிளைவுகள் ஏதும் அற்ற முறையாகும்.
அத்துடன், பக்கவிளைவுகள் ஏதுமற்ற அநேகமாக சமையலறைகளில் அன்றாடம் உபயோகப்படுத்தப்படுகின்ற இயற்கை மருந்து வகைகளை முறையாக உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடற்கட்டமைப்பை  குறுகிய காலத்தினுள் பெற்று நோயற்ற வாழ்வை தமதாக்கிக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்கள் மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கு
Sinaam Medicare
Assalafiyya Shopping Complex
Kandy Road,
Paragahadeniya, Kurunegala.
Tel       :  0374 982 659
Mob    :  0717 367 287


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &