அரச- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளத்தைப் போன்றதொரு இணையதளத்தை வடிவமைத்து கொரியாவுக்கு தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 1 கோடியே 60 இலட்சம் ரூபா மோசடியாக பெற்றுக்கொண்ட 3 பேரை CIDயினர் இன்று பாணதுறையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவர்கள் அரச இலட்சனை, அமைச்சர் டிலான் பெரேராவின் முகப்பு செய்தி, பணியகத்தின் தலைவரின் முகப்பு செய்தி போன்றவற்றை பிரசுரித்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் இணைப்புச் செயலாளர் எனவும் செயல்பட்டுள்ளனர். இவர்கள் www.slpflanka.com எனும் வெப்தளம் ஊடாக கொரியாவுக்கு தொழில் உள்ளதாகவும் அதில் வின்ணப்பங்களை டவுன்லோட் பண்னியும் அதன் பிறகு தேர்வுபெற்றுள்ளீர்கள் பணத்தை செலுத்தவும் போன்ற வெப்தள செய்தி ஊடாக இளைஞர்களிடமிருந்து 1 கோடி 60 இலட்சம் பணத்தை பெற்றுவந்துள்ளனர் .
இந்த வெப்தளத்தினை கடந்த 4 மாத காலமாக பயண்படுத்தியுள்ளனர். தற்பொழுது இந்த வெப்தளத்தை வடிவமைத்தவர் , பிரதான சந்தேக நபர் அடங்கலாக மேலும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபரும் மற்றுமொரு பெண்னும் முஸ்லிம் பொய்ப் பெயர்களிலே இயங்கி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் . பெண் 1 கோடி ரூபா பணத்துடன் இத்தாலி நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். இவரை சர்வதேச பொலிஸார் மூலம் பிடிப்பதற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பிரதான சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
மேலும் கொரியாவுக்கு செல்வதற்காக யாராவது மேற்படி வெப்தளம் ஊடாக அல்லது மேற்குறிப்பிட்டவரிடம் பணம் செலுத்தியிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர் அஜித் தெரிவித்துள்ளார்.