ஞானசார தேரரை கைதுசெய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும்
தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. இலங்கையில் இன்று நாட்டின் இறைமையை குறிவைத்து வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்கக்கோன் பதவி விலக வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தில் கோரியுள்ளது. அளுத்கமையில் பொதுபலசேனா பேரணி நடத்திய பின்னரே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன. முன்னதாக பௌத்த பிக்கு ஒருவர் முஸ்லிம் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தே இந்தப்பேரணி நடத்தப்பட்டது.
எனினும் பௌத்த பிக்கு தாக்கப்படவில்லை என்று வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தின. இருந்தபோதும் முந்திக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்திருந்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன், குறித்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இது பொறுப்பற்ற தமது பதவிக்கு அப்பாற்பட்ட குற்றமாகும். எனவே இலங்கக்கோன் பதவியை விட்டு விலகவேண்டும். இதேவேளை அளுத்கமவில் பொதுபலசேனா பேரணி நடத்திய போது அதற்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கினர்.
இதற்கு காரணத்தை கேட்டபோது அமைதியான பேரணி ஒன்றுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், குறித்த பேரணி, முஸ்லிம்களுக்கு எதிரான சுலோகங்களை தாங்கிய பேரணியாக இருந்தது. எனவே அதனை அமைதிப் பேரணி என்று எவ்வாறு கூறமுடியும் என்று ஆங்கில செய்தித்தாள் கேள்வி எழுப்பியுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் அசாத் சாலியை கைதுசெய்ய முடியுமானால் ஏன் அதே தவறை செய்த கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய முடியாது என்றும் செய்திதாள் கேட்டுள்ளது.
அதேவேளை அளுத்கம வன்முறைச் சம்பவங்களில் யாரும் கொல்லப்படவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை அவ்வப்போது பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். இதேவேளை முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான நோலிமிட் தீக்கிரையாக்கப்பட்ட போது இலங்கக்கோன் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. எனவே பொறுப்பற்ற செயல்களுக்காக இலங்கக்கோன் பதவி விலக வேண்டும் என்று ஆங்கில செய்தித்தாள் தமது கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது.
The Nation
Editorial
There were arguments over who threw the first stone, as though it justified throw-return and more. After all it is hard to pin it down to first stone cast when there were only a handful of STF men to ‘protect the (BBS) procession’ in Dharga Town. An STF source said, ‘That’s why the Muslims keep saying that the STF sided with the mob. We didn’t. We were acting on our orders which were specific and were about protecting the procession.’ It was not, let us repeat, not a peaceful procession. There were anti-Muslim slogans, whipping of hysteria, and undisguised inciting of violence against Muslims in a Muslim majority area by people who had petrol cans and carried weapons. Literally minutes after that ‘first stone’ Muslims and Muslim-owned premises were attacked and torched in Adhikarigoda, Aluthgama and the interior of Dharga Town.
The IGP offered speculation as fact. That’s incompetent and irresponsible. Yesterday the Muslim-owned ‘No Limit’ outlet in Panadura was torched. While it is not clear how it all happened, it is clear that the sequence of events prompt people to connect dots and reach conclusion, wrong though they may be. Tinkering with the truth and lying outright causes friction, throw out sparks and cause infernos that are hard to put out.
It is wrong to blame it all on one person, but it is equally wrong not to point out those who provided fuel and matchstick, tossed in extra firewood and refused to douse it even though they had all the water necessary to do the job. We have to take issue with the IGP. He must resign forthwith.