
சற்று முன்னர் (11:20PM )அலதெனிய குறுந்துகொல்ல பள்ளிவாயல் மீது இனந்தெரியாதோரினால் கல்லெரியப்பட்டுள்ளதாகவூம் உறுதியான தகவல் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
எவ்வித பாரிய சேதங்களோ அல்லது தாக்கங்களோ இல்லையேன்றும் பள்ளிவாயலின் 3 கண்ணாடிகள் உடைக்கப்ட்டிருப்பதாவூம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து வீடொன்றின் மீதும் கல் வீச்சு இடம்பெற்றிருக்கின்மை குறிப்பிடத்தக்கது. தற்போது ஊர் இளைஞர்கள் உன்னிப்பாக இருப்பதாகவூம் தெரிவிக்கப்டுகின்றது. எனினும் சந்தேக நபரையோ சந்தேகத்துக்கு இடமான எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை எனவூம் மேற்படி தகவல் தெரிவிக்கின்றது.
இது திட்டமிட்ட செயலோ அல்லது ஒரு சில விஷமிகளால் தூண்டிவிடுவதற்காகவூம் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவூம் செய்யப்பட்ட செயலா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நில இருப்பதாகவூம் குறித்த ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக குறித்த இடத்துக்கு ஊர் வியாபாரச் சங்கத் தலைவரும் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைத் தலைவருமான "ஜனா" அவர்கள் வருகை தந்திருப்பதாகவூம் நிலமை சுமுகமாக இருப்பதாகவூம் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்.