BREAKING NEWS

Jun 19, 2014

வெறிச்சோடி போயிருந்த பறகஹதெனிய


அளுத்கம மற்றும் மற்றும் தர்கா நகரில் இடம்பெற்ற திட்டமிட்ட இன ஒழிப்பு நாசகரச் செயலினை எதிர்த்து இன்று வியாழக்கிழமை பறகஹதெனிய வாலிபர்கள் மற்றும் பறகஹதெனிய வியாபாரிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றது.

இதன் பிரதிபலிப்பாக முழு பறகஹதெனியவூம் (கண்டி குருநாகல் பிரதான வீதி) வெறிச்சோடிப் போயிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

முழு நாள் கடையடைப்பாக இடம்பெற்றதால் மாலை மற்றும் இரவூ வேளையிலும் முற்றாக கடைகள் ஹோட்டல்கள் மருத்துவ நிலையங்கள் உட்பட அனைத்து விற்பனை நிலையங்களும் முற்றாக மூடப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

வழமையாக இரவூ நேர பசாராக பகலைப் போன்றே இரவிலும் பிரகாசிக்கும்இ சன நெரிசலாகக் காணப்படும் பறகஹதெனிய பசார் இன்று 1999ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் ஊரடங்குச் சட்டத்துக்குப் பிறகு அதைவிடவூம் பூரண இருளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 

  



(அந்தவகையில் எமது அமைதியான இவ்வெதிர்ப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழு நன்றி தெரிவிக்கின்றது) 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &