BREAKING NEWS

Jun 19, 2014

இன்று 3 1/2 அடி நீள வாலுடன் 6 பேர் கைது



     


இன்று மாலை பறகஹதெனிய பெரிய பள்ளிவாயல் எதிரே 3 1/2 அடி நீளமான வால் ஒன்றுடன் 6 பெரும்பான்மை இன சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழமைபோல் பறகஹதெனிய பெரிய பள்ளி வாசல் எதிரே பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேகத்தின் பேரில் ஹொன்டா இன்சைட் ரக கார் வண்டியொன்றை நிறுத்தி சோதனை செய்த வேளையில் குறித்த காரில் 6 பேர் வருகை தந்திருந்ததுடன் அவர்கள் வசமிருந்த சுமார் 3 1/2 அடி நீளமான வால் ஒன்று பெட்ரோல் நிரப்பிய கேன்கள் மற்றும் சிறிய ரக ஆயூதங்களை கைப்பற்றியூள்ளனர்.

இவர்களை விசாரித்த வேளையில் மூன்று வித்தியாசமான பதில்களை வழங்கியதன் காரணத்தினால் சந்தேகத்தின் பேரில் இவர்களை கைது செய்து மாவத்தகம பொலிசில் தடுத்து வைத்துள்ளதுடன் நாளை பிலெஸ்ஸ மஜிஸட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த வண்டி (SP -KX 4893) தென் மாகாண ஹக்மீமனையை சேர்ந்ததென அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர்களை விசாரித்த வேளையில் இவர்கள் மீன் வியாபாரிகள்( மூன்றரை அடி நீள வால் மீன் வெட்டவா?) என்று முதற் தடவை பதிலளித்திருக்கின்றனர். மேலதிக விசாரனையின் ஒருவருக்கொருவர் பரஸ்பர விரோதமான கருத்துக்களை அதாவது, வாகனம் ஒன்றை கொள்வனவூ செய்வதற்கு வந்ததாகவூம் இன்னொருவர் தாம் வேட்டையில் வந்ததாகவூம் (மனித வேட்டையோ?) தெரிவித்ததன் காரணத்தினால், இவர்கள் வேறேதும் நாசகரச் செயல்களை மேற்கொள்ள வந்தவர்களோ? என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவத்தகம பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

தற்போது 6 சந்தேக நபர்களும் மாவத்தகம போலிஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &