BREAKING NEWS

Jun 19, 2014

முஸ்லிம்களின் தன்மை இது தான் என்பதை உணர வைத்தார்கள்.




இன்று (19-06-2014 வியாழக்கிழமை) காலை பறகஹதெனிய சந்தியில் மாவத்தகம பொலிஸ் ஜீப் மற்றும் கூட்டமொன்றிற்கு கண்டிக்கு சென்றுகொண்டிருந்த ஹிரிப்பிட்டிய பௌத்த பிக்கு வருகை தந்த வேன் வண்டி நேருக்கு நேர் மோதியதில்  விபத்துக்குள்ளான பௌத்த பிக்குவூக்கு எமது பறகஹதெனிய சகோதரர்கள் கவனித்த விதத்தைப் பாருங்கள். அல்ஹம்துலில்லாஹ். முஸ்லிம்களின் தன்மை இது தான் என்பதை  உணர வைத்தார்கள்.

மிகவூம் மரியாதையூடன் உட்கார வசதியளித்து உணவளித்து பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை சகல வசதிகளையூம் செய்து கொடுத்து எமது உண்மையான தன்மையை வெளிப்படுத்திய எமது உடன் பிறப்புக்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.




Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &