BREAKING NEWS

Jun 19, 2014

பரகஹதெனிய வாகன விபத்து


இன்று வியாழக்கிழமை காலை பரகஹதெனிய சந்தியில் மாவத்தகம போலிஸ் ஜீப் குருனாகலையிலிருந்து கண்டியை நோக்கி சென்றுகொண்டிருந்த வான் வண்டியொன்றுடன் நேருக்கு நேரே மோதுண்டது.  மோதுண்ட வான் வண்டியில் பெளத்த பிக்குகள் சிலரும் எனைய்யோரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பயணித்த எவருக்கும் பாரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனினும் போலிஸ் ஜீப் வண்டியின் முன்பகுதி வேகுவளவில் சேதமடைந்திருந்தது.

மாவத்தகம போலிஸ் வசமிருந்த ஒரேயொரு ஜீப் வண்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இன்று பரகஹதெனியவில் கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெறுகின்ற வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &