இந்த ரமலானில், பெண்கள் இரவு வணக்கங்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு விஷேட பாதுகாப்பு வழங்குவதாக உறுதி.
ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களில் தராவிஹ் தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கா உறுதியளித்துள்ளார்.
இதன் படி பெண்கள் தராவிஹ் தொழுகையில் ஈடுபடும் பள்ளிவாசல்களுக்கு குறித்த நேரத்தில் மூன்று மணித்தியாலங்கள் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
சிரேஷ்ட அமைச்சர் ஏ .எச். எம் பெளஸி நாட்டில் நிலவும் முஸ்லிம் களுக்கெதிரான அசாதாரண நிலை குறித்து பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கி நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவரால் மேற்குறிப்பிட்ட உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பௌஸி இது தொடர்பில் விடிவேள்ளிக்கு விளக்கமளிக்கையில் நாட்டிலுள்ள சில பள்ளிவாசல்களில் பெண்களுக்கான தராவிஹ் நடத்துவதில்லை என பள்ளி நிர்வாகசபைகளினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தராவிஹ் தொழுகையில் கலந்து கொள்ளும் பள்ளிவாசல்கள் இரவு நேர பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமைதியாகஇருக்க வேண்டும் இக் காலத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு இனவாதிகள் முயற்சிப்பார்கள் . இதற்க்கு ஒரு போதும் இடமளிக்க்ககூடாது. அரசாங்கம் எமக்கு பாதுகாப்பு வளங்குவதறக்கு உத்தரவாதமளிதுள்ளது என்றாலும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .
சில தீய சக்திகள் வேண்டுமென்றே தவறான செய்திகளிப்பரப்பி எமது சமூகத்தை வேண்டுமென்றே உணர்ச்சி வசப்படுத்தி தீய செயல்களை தூண்டி விடுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ரமலான் மாதம் அவர்களுக்கு சாதகமாகஅமைந்து விடலாம்.
எனவே முஸ்லிம்களுக்கு அவதானத்துடன் தமது சமய கடமைகளை முன்னெடுக்க வேண்டும் . ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் பஸில் ராஜபக்ச உட்பட பொலிஸ் மா அதிபர் முச்ல்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க்குவதற்கான சகல உத்தரவதங்களையும் பிறப்பிதுள்ளார்கள் என்றார் .