பேருவளை, அம்பேபிட்டிய பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையில் தீ.
பேருவளை, அம்பேபிட்டிய பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்று சற்றுமுன் தீப்பற்றி எரியும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
பேருவளை, அம்பேபிட்டிய , ஹிஜ்ரா வீதியில் (ஜங்சனுக்கு அருகாமையில்) உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான (கட்டிடம் பெரும்பான்மை இன சகோதரர் ஒருவருக்கு சொந்தமானது) பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று (பின் பக்கத்தில்) தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் தீ எரிவதை அவதானித்த மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி தீயை அனைத்துள்ளனர்.
பேருவளை தாக்குதல் சம்பவத்தின் பிறகு ஜாமியா நலீமிய்யா பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
தற்போது நிலைமை சுமுக நிலைக்கு வந்துள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கடையின் சேத விபரம் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை.
இது நாசகார செயலா அல்லது தீவிபத்தா?