BREAKING NEWS

Jun 18, 2014

பேருவளை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


அகதி முகாம்களில் தங்கியிருந்த முஸ்லிம்களை வீடுகளுக்கு திரும்புமாறு கோரி அரசாங்கம் இன்று காலை ஊரடங்குச் சட்டத்தை நீக்கிய நிலையில், முஸ்லிம்கள் அகதி முகாமுக்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தாம் திரும்பி சென்று வசிப்பதற்கு இடமில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். பிரதேசத்தில் எந்த நேரத்திலும் வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால் பிரதேத்திற்கு வலுவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் அட்டகாசத்தை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


123


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &