BREAKING NEWS

Jun 17, 2014

வெலிப்பென்ன, பலப்பிட்டியவில் பதற்றம்...

வெலிப்பென்ன மற்றும் பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் தற்போது பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக இஸ்லாத்தை தழுவியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகளுக்கு இதன்போது தீவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெலிப்பென்ன பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கும் இன்று மாலை தீ வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காலி மாவட்டத்திலுள்ள பலப்பிட்டிய நகரிலுள்ள முஸ்லிம்களின் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பிரதேசத்திலுள்ள சிங்கள மக்கள் முஸ்லிம்களை பாதுகாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &