கொழும்பு மாநகரில் 'வாகன ஹோர்ன் ஒலி' எழுப்புவது நாளை (5) தடை செய்யப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
நாளையுடன் இந் நடவடிக்கை முடிவடையப் போவதில்லை எனவும் கொழும்பு மாநகரம் வாகன ஒலியினால் தினம் தினம் மாசடைகிறது. எனவே, இந் நடவடிக்கை தொடருமென்றும் மேயர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை, சூழல் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸ் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியன இணைந்து உலக சூழல் பாதுகாப்பு தினமான ஜூன் 5ஆம் திகதியை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு திங்கட்கிழமை கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றது.
இதில் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே மேயர் முஸம்மில் இதனை தெரிவித்தார்.