BREAKING NEWS

May 1, 2014

இதே தண்டனை பறகஹதெனிய விபத்தின் குற்றவாளிக்கு வழங்கப்படுமா?

போதையில் சைக்கிள் செலுத்தியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

(http://www.virakesari.lk/articles/2014/05/01/)
REPORTED NEWS
அட்டாளைச்சேனை  பாலமுனையைச் சேர்ந்த ஒருவர் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றபோது அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்டவர் கடந்த திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான்  ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன் குற்றம் இருந்ததை கருத்திற் கொண்டு ஐந்து வருடங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனையும் பத்தொன்பதாயிரத்து ஐந்நூறு ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

இதே தண்டனை பறகஹதெனிய விபத்தின் குற்றவாளிக்கு வழங்கப்படுமா?

இதே நிலமை இன்று பறகஹதெனிய பெரிய பள்ளிவாசல் அருகெ இடம்பெற்றது. அதில் குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நபர் பொலிசாருக்கு எதிரே முச்சக்கர வண்டியை மோதியது மட்டுமன்றி தப்பிச் சென்றிருந்தார். பிரதேச வாசிகள் அவரை திரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தமை. குறிப்பிடத்தக்கது. 

பறகஹதெனிய மக்களுடன் ஜன்மப் பகையூடன் இருக்கும் மாவத்தகம பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுப்பனரா? அல்லது மீண்டும் தமது பலி வாங்கல் படலத்தை தொடர்வார்களா?


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &