இலங்கையில் நாளுக்கு நாள் சிறுபான்மையினருக்கு எதிரான மத விரோத நிலைப்பாடு அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் ராஜாங்க திணைக்களம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது The U.S. Commission on International Religious Freedom (USCIRF) அமைப்பு.
பொது பல சேனா, சிங்ஹல ராவய போன்ற அமைப்புகளால் முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுவதோடு அச்சுறுத்தலுக்குள்ளாகி வரும் நிலை கடந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக அரசாங்கமும், பொலிசும் எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவ்வமைப்பு குறிப்பாக பொது பல சேனா எனும் அமைப்பு அரசின் அனுசரணையிலேயே இயங்குவதாக சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
The BBS frequently makes public derogatory statements about religious minorities, calls for bans on Muslim head scarves and halal slaughter, urges Buddhists not to do business with religious minorities, and demands the adoption of an anti-conversion law.
NGOs and various religious communities have asserted that it is BBS policy to incite Buddhist Monks and laity to violence.
கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
முழுமையான அறிக்கையை பார்வையிட : இங்கு அழுத்துக