பறகஹதெனிய பெரிய பள்ளி வாயல் எதிரே குடி போதையில் காரோட்டி வந்த (சட்டத்தரணி) ஒருவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களு;டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியை மோதிய சட்டத்தரணி வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றதுடன் அருகிலிருந்து சகோதரர்கள் வாகனங்களில் துரத்திச்சென்று வேவூட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சட்டத்தரணியை மீண்டும் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் எவ்வித நடவடிக்கையூம் எடுக்காது குறித்த குற்றமிழைத்தவரின் போதை இறங்கும் வரை காத்துக்கொண்டிருப்பது. சட்டத்தின் ஆழுமையை வேடிக்கையாக பிரதிபலிக்கின்றது.
.jpg)
.jpg)
