BREAKING NEWS

Apr 27, 2014

பொது பல சேனாவுக்கு பயப்பட மாட்டேன் : பசில் ராஜபக்ச

பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்படபோவதில்லை.  யுத்த காரணமாக வடக்கில் அகதியாக வாழ்ந்து வருகின்ற முஸ்லீம்களுக்கு உரிய காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதனை துண்டுகளாக வழங்கி மீளக்குடியமர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு என தெரிவித்துள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.

இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லீம் தமிழ் என சகலருக்குமான காணிகள் அடையாளம் கண்டு மீளகுடியமர்த்தப்படுவார்கள். இம் மக்கள் எமது நாட்டின் பிரஜைகள். இதற்கு முன்னரும் காணிகள் வழங்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளகுடிமர்த்தியுள்ளேன். இந்த மக்கள் வாழ்ந்த சொந்தக் காணிகளில் இரானுவத்தினர் முகாமிட்டுள்னர். இவர்களின் பாதுகாப்புக் கடமைக்காக இக் காணிகள் சுவிகரிக்கப்பட்டன. பொதுபலசேனா சொல்வது போன்று ஏற்கனவே வாழ்கின்ற மக்களை அகற்றுமாறு சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை என சிங்கள ஊடகமொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் பசில்பதிலளித்தார்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &