BREAKING NEWS

Apr 16, 2014

இஸ்லாத்திற்கு மாறினார் நடிகர் ஜெய்.?

-MN -

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு  மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார். 

இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இஸ்லாத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக மாறியுள்ளார். இதையடுத்தே இவர் இஸ்லாத்திற்கு மாறியதாக முன்னணி தமிழக பத்திரிகைகள் செய்தி இன்று வெளியிட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &