BREAKING NEWS

Apr 13, 2014

கல்முனையில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்து

(MN)

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில்,  கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஒரு பெண் உட்பட இருவர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன், பலர் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றும், கல்முனை வவுனியா லேலன்ட் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேற்படி விபத்தில் இரு பஸ்களும் முன்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளதுடன் கல்முனை வவுனியா லேலன்ட் பஸ்ஸில் சாரதியின் இருக்கைக்கு அருகில் மதுபானத்துடனான போத்தலும் காணப்பட்டது. மதுபோதையில் அந்த பஸ் சாரதி பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கல்முனை பொலிஸார் சந்தேகம்  தெரிவிக்கின்றனர்.

மரணித்தவர்கள் கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய சல்மான் பாரிஸ் ,சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியைச் சேர்ந்த48 வயதுடைய சலீமா தமீம் ( மின்னா ) ,அக்கரைப்பற்று மத்திய வீதியைச் சேரந்த 55வயதுடைய பீபி பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை 18என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.எம். கப்பார் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &