2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர் தர, க.பொ.த சாதாரண தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளை பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதற்கமைய, க.பொ.த உயர் தர பரீட்சை ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையும் க.பொ.த சாதாரண தர பரீட்சை டிசெம்பர் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 17ஆம் திகதியும் இடம்பெறவுளளமை குறிப்பிடத்தக்கது.